நீர்த்தேக்க தொட்டி இருந்தும் தண்ணீர் வரவில்லை மக்கள் புகார்

64பார்த்தது
சிவகங்கை அருகே உள்ள கூத்தாண்டம் பகுதி. இந்தப் பகுதிகள் சுமார் 300 -க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அங்கு சுமார் 40 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைந்துள்ளன. வல்லனேரி ஊராட்சி மூலம் இந்த தொட்டிகள் முலம் பொதுமக்களுக்கு தண்ணீர் விநியோகிக்கப்பட்ட வந்தது. இந் நிலையில், தற்போது ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் வீட்டுக்கு வீடு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு அதன் மூலம் தண்ணீர் வழங்கப்படாததால். இங்கே உள்ள 2 தொட்டிகளின் மூலம் தண்ணீர் வழங்கப்பட்டு வந்தது.
ஆனால், சுமார் ஒரு மாதமாக முறையாக அந்த குழாய்கள் மூலம் தண்ணீர் வராததால் அப்பகுதி பொதுமக்கள் குடிநீரை விலைக்கு வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையெனவும் பொதுமக்கள் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் குடிநீர் இணைப்பை சரி செய்து உடனடியாக குடிநீர் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி