மாணவிகளுக்கு ரொக்க பரிசை வழங்கிய எம்எல்ஏ

85பார்த்தது
சிவகங்கையில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சமீபத்தில் நடைபெற்ற பிளஸ் டூ மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு ரொக்கப் பரிசு வழங்கும் விழாசிவகங்கை தொகுதி எம்எல்ஏ செந்தில் நாதன் தலைமையில் நடைபெற்றது.
நகராட்சி கவுன்சிலர் மகேஷ் குமார் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியை சிவமணி வரவேற்று பேசினார்.
விழாவில் பிளஸ் 2 தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி நாகேஸ்வரி மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவிகள் ஸ்ரீபதி மற்றும் ஹர்ஷிதா ஆகியோருக்கு எம். எல். ஏ செந்தில்நாதன் தன்னுடைய சொந்த நிதியில் இருந்து தலாரூ பத்தாயிரம் பரிசாக வழங்கினார் விழாவில் உடல் கல்வி இயக்குனர் ராமசாமி , நகர் கழக செயலாளர் என் எம் ராஜா, அம்மா பேரவை மாவட்ட செயலாளர் இளங்கோவன், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பில்லூர் ராமசாமி அதிமுகஒன்றிய செயலாளர் செல்வமணி மற்றும். வி ஆர் பாண்டி சரவணன், ராஜ்குமார் , முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி