நடிகர் மோகன் நடராஜன் மறைவுக்கு டி.ராஜேந்தர் இரங்கல்

80பார்த்தது
நடிகர் மோகன் நடராஜன் மறைவுக்கு டி.ராஜேந்தர் இரங்கல்
நடிகரும், தயாரிப்பாளருமான மோகன் நடராஜன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து டி.ராஜேந்தர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “மோகன் நடராஜன் மறைந்துவிட்டார் என்ற செய்தி என் மனதை ஈட்டி போல் தாக்கியது, கண்ணீர் பூக்களால் அஞ்சலி செலுத்துகிறேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும் திரையுலக நண்பர்களுக்கும் எனது ஆறுதலை கூறி கொள்கிறேன். அவரது ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.” என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி