வங்கக்கடலில் தொடக்கத்தில் ஏற்பட்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை கொஞ்சம், கொஞ்சமாக வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாகவும், தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் மாறியிருக்கிறது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறுமா என தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மீனவர்கள் 5 நாட்களுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.