திமுக எம்.பி. கதிர் ஆனந்த் கல்லூரியின் சர்வர் அறைக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கல்லூரி நிர்வாகம் தாக்கல் செய்த மனுவில், சர்வர் அறைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதால் தேர்வு நடத்துவதில் பல்வேறு சிக்கல் உள்ளது. மாணவர்கள் நலன் கருதி சர்வர் அறைக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற வேண்டும் என கோரப்பட்டிருந்தது. சோதனைக்கு சென்ற போது கணினிகளை ஆய்வு செய்ய ஒத்துழைக்காததால் சர்வர் அறைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்தது.