தமிழக வெற்றிக் கழகத்தின் ஆலோசகர் ஜான் ஆரோக்கிய சாமி பேசிய ஆடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் லீக் ஆகியுள்ளது. இந்த ஆடியோ லீக் ஆனதால் புஸ்ஸி ஆனந்த் நெருக்கடியில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தவெக தலைவர் விஜய் சொன்னால் கூட, புஸ்ஸி ஆனந்த் கேட்பதில்லை என்பதுபோல் அந்த ஆடியோவில் அவர் பேசியிருப்பதாக தெரிகிறது. நெருக்கடியை சமாளிக்க மாவட்ட பொறுப்பாளர்களிடம் விளக்கமளிக்க புஸ்ஸி ஆனந்த் முடிவு செய்திருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.