மதுரை: மேலூர் அருகே டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை மத்திய அரசு முற்றிலுமாக கைவிடும் வரை தங்களது போராட்டம் தொடரும் என மேலூரை சுற்றியுள்ள அரிட்டாபட்டி, வல்லாளப்பட்டி, நரசிங்கம்பட்டி கிராம மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்நிலையில் இன்று (ஜன., 09) தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பு தங்களுக்கு வேண்டாம் என சம்பந்தப்பட்ட கிராம மக்கள் நேரடியாக வந்து ரேஷன் கடைகளில் தெரிவித்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.