தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (ஜன.09) ரூ.1000 வழங்காதது குறித்து நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, “வெள்ள நிவாரணப் பணிகளுக்கு ஒன்றிய அரசிடம் ரூ.37,000 கோடி கேட்கப்பட்டது. ஆனால், ரூ.276 கோடி மட்டுமே கிடைத்தது. SSA திட்டத்தில் ரூ.2100 கோடியை ஒன்றிய அரசு வழங்கவில்லை. இதனால், மாநில அரசியின் நிதியைக் கொண்டே அவை ஈடுகட்டப்படுகின்றன. இந்த காரணங்களால் தான் பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரூ.1000 வழங்க முடியவில்லை” என்றார்.