திருப்பதி கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த தமிழ்நாட்டை சேர்ந்த மல்லிகா என்பவரின் குடும்பத்தினருக்கு ரூ. 2 லட்சம் நிவாரண உதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மல்லிகாவின் சடலத்தை சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழ்நாடு அரசு சார்பில் மேற்கொள்ள முதலமைச்சர் உத்தரவிட்டதாகவும் தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.