சென்னை: பனையூரில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நாளை (ஜன.10) மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்க இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. புதிதாக தேர்வு செய்யப்பட உள்ள மாவட்ட செயலாளர்கள் பனையூர் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டு உள்ளனர். தவெக மாவட்ட செயலாளர்கள், அணி தலைவர்கள் நாளை இறுதி செய்யப்பட உள்ளனர். இதற்காக வாக்கெடுப்பு முறை நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.