தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சாம்சங் ஊழியர்கள் பயணித்த வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ள சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. போராட்டத்தில் கலந்து கொள்ள சென்ற ஊழியர்களின் வேன் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் படுகாயமடைந்த 12 ஊழியர்கள் ஸ்ரீபெரும்பதூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், வேன் ஓட்டுநர் வேண்டுமென்றே விபத்தை ஏற்படுத்தியதாக ஊழியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.