திருப்புவனத்தில் திருடு போகும் பேட்டரிகள்

3702பார்த்தது
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மற்றும் நான்கு வழிச்சாலைகளில் பலரும் லாரி, மண் அள்ளும் இயந்திரங்கள் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி வைப்பது வழக்கம். இவற்றின் பேட்டரிகளை ஒரு கும்பல் தொடர்ச்சியாக திருடி வந்தனர். வாகன உரிமையாளர்கள் போலீசில் புகார் செய்தனர்.

திருப்புவனம் போலீசார் விசாரணை நடத்தி மடப்புரத்தைச் சேர்ந்த பிரதீப் 20, முத்துகருப்பன் 26, பெத்தானேந்தலைச் சேர்ந்த பட்டாசு பாலு என்ற பாலகிருஷ்ணன் 28, ஆகிய மூவரையும் கைது செய்து அவர்களிடமிருந்த 16 பேட்டரிகளை பறிமுதல் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி