கும்பாபிஷேகம் நடத்த ஊராட்சி மன்ற தலைவர் இடையூறு செய்வதாக மனு

51பார்த்தது
கும்பாபிஷேகம் நடத்த ஊராட்சி மன்ற தலைவர் இடையூறு செய்வதாக மனு
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே விரையாதகண்டன் கிராமத்தில் உள்ள அய்யனார் கோவிலுக்கு 14 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேக பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக சுற்றியுள்ள 5 கிராம மக்கள் ஒன்றுகூடி நிர்வாக குழு உறுப்பினர்களை தேர்வு செய்து, கும்பாபிஷேகம் செய்யும்பணி நடைபெற்ற வருகிறது. இதனை ஊராட்சி மன்ற தலைவர் கதிர்வேல் தடுக்கும் விதமாக, தன் தலைமையில் தான் கும்பாபிஷேகப்பணி நடைபெற வேண்டும் எனக் கூறி இடையூறு ஏற்படுத்தி வருவதாக கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும் இளையான்குடி வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர், காவல் ஆய்வாளரிடம் ஐந்து கிராம மக்கள் புகார் மனு அளித்தார். அதில் கும்பாபிஷேக பணியினை எவ்வித இடையூறு இல்லாமல் நடைபெற நடவடிக்கை எடுக்குமாறு, ஐந்து கிராம மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி