விமானம் புறப்படும் போது டயர்கள் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் இருந்து அபுதாபிக்கு புறப்பட்ட விமானத்தில் இருந்து பயணிகள் அவசரமாக இறக்கப்பட்டனர். EY461 787-9 Dreamliner Etihad என்ற விமான டயர்கள் வெடித்ததால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பயணிகள் மற்றும் பணியாளர்கள் உள்பட 270 பேர் பத்திரமாக கீழே இறக்கப்பட்டனர். டயர்களில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்ட நிலையில், விமானி சாதுர்யமாக செயல்பட்டு பெரும் அசம்பாவிதத்தை தவிர்த்தார்.