துரூவ் ஹெலிகாப்டர்கள் இயக்கம் நிறுத்தம்

51பார்த்தது
இந்திய ராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் கடலோரக் காவல்படையில் பயன்பாட்டில் உள்ள துரூவ் ரக ஹெலிகாப்டர்களின் இயக்கத்தை நிறுத்தி வைக்க மத்திய பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இந்திய ராணுவத்தில் 330 துரூவ் ரக ஹெலிகாப்டர்கள் பயன்பாட்டில் உள்ள நிலையில், அவற்றின் இயக்கத்தை நிறுத்தி வைத்து பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த ஞாயிறன்று குஜராத்தில் துரூவ் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 3 பேர் உயிரிழந்ததன் எதிரொலியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி