ஒட்டு மொத்த இந்திய சினிமாவை தனது திரைக்கதை மற்றும் வசனத்தால் வியக்க வைத்த கே.பாக்யராஜுக்கு இன்று (ஜன. 07) 72வது பிறந்தநாள் ஆகும். ஒரு இயக்குநர் தனது அறிமுகப் படத்திலிருந்து தொடர்ந்து 7 படங்கள் வெற்றிப் படங்களாக அளிப்பது அரிது. அதிலும் இயக்கத்துடன் பிரதான வேடத்தில் தானே நடித்து தொடர் வெற்றிகளை குவித்தவர் பாக்யராஜ். திரைக்கதையை அவரளவுக்கு சிறப்பாக வடிவமைத்தவர்கள் தமிழில் மிக குறைவு என்பதே நிதர்சனம்.