பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ள ஹனிரோஸ் அண்மையில் வெளியிட்ட பதிவில், "தனியார் நிறுவன திறப்பு விழாவில் நான் கலந்து கொண்ட போது ஒருவர் என்னை பின் தொடர்ந்து தொல்லை கொடுத்தார்" என தெரிவித்திருந்தார். அவரின் இந்த பதிவை பலரும் விமர்சித்தனர். இது தொடர்பாக ஹனிரோஸ் போலீஸ் புகார் கொடுத்த நிலையில் 27 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவருக்கு தொல்லை கொடுத்த ஷாஜி (38) என்பவரை கைது செய்தனர்.