நாமக்கல்: தனியார் பார்மசி கல்லூரியில் படித்து வந்த சந்தான கோபாலன் (23) என்ற மாணவர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்தார். நேற்று (ஜன. 06) கோபாலன் பெண்கள் பிரிவில் உள்ள மருத்துவர்கள் கழிவறையில் சடலமாக கிடந்தார். அவர் தனக்கு தானே ஊசி செலுத்தி தற்கொலை செய்திருக்கலாம் அல்லது போதைக்காக அதிக மருந்தை பயன்படுத்தியிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ள நிலையில் போலீஸ் விசாரிக்கிறது.