சார்பதிவாளர் அலுவலகத்தில் மதிமுகவினர் பூட்டு போட முயற்சி

56பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூரைச் சேர்ந்த நைனார் மற்றும் பூலான் சகோதரர்கள், தங்களுக்குச் சொந்தமான இடத்தில் 120 அடி உயர கொடிக்கம்பம் அமைப்பதற்காக ஏற்கனவே ஒரு பகுதியை பதிந்து கொடுத்துள்ளனர். மீதமுள்ள 40 சென்ட் இடத்தை வேறொருவருக்குப் பத்திரம் பதிவு செய்ய வந்தபோது, தகுந்த ஆதாரங்கள் இல்லை எனக் கூறி மாற்றுத் திறனாளிகள் என்றும் பாராமல் அவர்களை அலைக்கழித்துள்ளனர்.
நேற்று பத்திரம் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பத்திரத்தைக் கொடுக்குமாறு கேட்டபோது, அலுவலகத்திலிருந்த அதிகாரிகள் இடத்தை நேரில் பார்வையிட்டுத் தணிக்கை செய்த பிறகுதான் பத்திரம் வழங்க முடியும் என மீண்டும் அலைக்கழித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சகோதரர்களுடன் வந்த மதிமுகவினர், சார்பதிவாளர் அலுவலகத்தில் இருந்தவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அலுவலகத்தைப் பூட்ட முயன்றனர். இதனால் அண்ணா சிலை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி