விக்கிரவாண்டியில் லியா லட்சுமி (4) என்ற சிறுமி, பள்ளிக் கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்தது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், சிறுமி உயிரிழப்புக்கான காரணம் குறித்து பிரேத பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள் வாய்மொழியாக தகவல் தெரிவித்துள்ளனர். அதாவது, நுரையீரலில் அதிக அளவு தண்ணீர் புகுந்ததால் சிறுமி உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனைக்குப் பின் தெரியவந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.