சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேச்சு தோழமைக்கான இலக்கணம் அல்ல என்று திமுக நாளேடான முரசொலியில் கட்டுரை வெளியாகியுள்ளது. அண்ணா பல்கலை பாலியல் விவகாரத்தை கண்டித்து நடைபெறும் போராட்டங்களை ஒடுக்குவது ஏன் என்றும் தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசர நிலையா? எனவும் கே.பாலகிருஷ்ணன் கேள்வியெழுப்பிருந்தார். இந்த நிலையில், திமுக ஆட்சிக்கு எதிரான சதி கூட்டத்துக்கு தீனி போடத் தொடங்கியிருக்கிறார் கே.பாலகிருஷ்ணன் என்று கட்டுரை வெளியாகியுள்ளது.