பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் கடைசிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு 162 ரன்களை இந்தியா இலக்காக நிர்ணயித்துள்ளது. முதல் இன்னிங்ஸில் இந்தியா 185 ரன்களும், ஆஸ்திரேலியா 181 ரன்களும் எடுத்தன. பின்னர் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய கிரிக்கெட் அணி 157 ரன்களுக்கு சுருண்டது. இதையடுத்து மூன்றாம் நாளான இன்று (ஜன. 05) 162 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கியுள்ளது ஆஸ்திரேலியா.