உத்தர பிரதேசம்: ஹமிர்பூர் மாவட்டத்தை சேர்ந்த 30 வயதான நபர் நேற்று (ஜன. 04) விஷம் குடித்து தற்கொலை செய்துக் கொண்டார். இறப்பதற்கு முன்னர் அவர் வெளியிட்ட வீடியோவில், "எங்கள் காதல் முடிவுக்கு வந்துவிட்டது. மனைவியும், மாமியாரும் என்னை மிகவும் துன்புறுத்தினார்கள், எனக்கு உதவிக்கு என யாரும் இல்லை. அவர்கள் இருவருக்கும் எந்தளவுக்கு கடுமையான தண்டனை கொடுக்க முடியுமோ கொடுங்கள்" என வேதனையுடன் பேசியிருக்கிறார்.