திருப்பூர்: பல்லடத்தை அருகே உரிய ஆவணங்கள் இன்றி வங்கதேச நாட்டைச் சேர்ந்த நபர்கள் தங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார் ஒரு வீட்டில் இருந்தவர்களை காவல்நிலையம் கொண்டு சென்றனர். விசாரணையில் அவர்கள் ரவ்ஹான் (36), ஹரிருள் (26), ரஹ்மான் (20), சோஹில் (20), சபிபுல் (40), அப்துல் (27) என்பது தெரியவந்தது. உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருந்து பனியன் நிறுவனங்களில் பணியாற்றி வந்தது தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார் சென்னை புழல் சிறைக்கு அழைத்து சென்றனர்.