சிறுமி மரண வழக்கு.. ஆசிரியைக்கு 7 நாள் நீதிமன்ற காவல்

60பார்த்தது
சிறுமி மரண வழக்கு.. ஆசிரியைக்கு 7 நாள் நீதிமன்ற காவல்
விக்கிரவாண்டியில் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து குழந்தை இறந்த சம்பவத்தில் ஆசிரியை ஏஞ்சலுக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. வழக்கை விசாரித்த விக்கிரவாண்டி மாவட்ட உரிமையியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி, ஆசிரியைக்கு 7 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி உத்தரவிட்டுள்ளார். வரும் 10ஆம் தேதி வரை ஆசிரியை ஏஞ்சல் கடலூர் சிறையில் அடைக்கப்படவுள்ளார். பள்ளி முதல்வர் மற்றும் தாளாளர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி