வேலூர்: காட்பாடியில் திமுக எம்.பி. கதிர் ஆனந்துக்கு சொந்தமான பொறியியல் கல்லூரியில் 2 நாட்களாக நடந்து வந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவடைந்தது. ஜன., 3ஆம் தேதி முதல் அமலாக்கத்துறையினர் வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்தினர். 8 கார்களில் வந்திருந்த 15க்கும் மேற்பட்ட அதிகாரிகள், சோதனையை நிறைவு செய்து துணை ராணுவ படையினருடன் நள்ளிரவு 2.40 மணிக்கு புறப்பட்டனர். கல்லூரி தொடர்பான ஆவணங்கள், வங்கி பரிவர்த்தனை ஆவணங்கள், உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.