அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தை முற்றுகையிட முயன்றதாக ஜெயக்குமார், விருகம்பாக்கம் ரவி உள்ளிட்ட 900 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அண்ணா பல்கலை., மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தை கண்டித்து நேற்று (டிச., 26) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்ற நிலையில், சாலை மறியலில் ஈடுபட்டதாக கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர்.