தமிழக பாஜகவை காப்பாற்ற முடியாது என்று நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலை., பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை காலில் செருப்பு அணியப்போவதில்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார். இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள எஸ்.வி.சேகர், அவல நகைச்சுவையின் உச்சகட்டம். இப்படிப்பட்ட கோமாளியை நியமித்த டெல்லி தலைவர்கள் ஆளுக்கு 100 சாட்டையடி அடித்துக்கொண்டால் கூட தமிழக பாஜகவை காப்பாற்ற முடியாது என குறிப்பிட்டுள்ளார்.