இடைத்தரகர்கள் இன்றி பணம் கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி

75பார்த்தது
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே கீழநெட்டூரில் கண்மாய் பாசனம் மூலம் கோடை நெல் விவசாயம் செய்த விவசாயிகள் அறுவடை நிறைவடைந்த நிலையில், "கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்"- என கோரிக்கை விடுத்தனர். இதனை அடுத்து மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் உத்தரவின் பேரில் நுகர் பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் அருண் பிரசாத் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இதனை அடுத்து விவசாயிகளின் வேண்டுகோளுக்கு இணங்க, இன்று தமிழக அரசு சார்பில் நுகர் பொருள் வாணிப கழகம் மூலம் கீழநட்டூரில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டது. இதில் தமிழகத்திலேயே முதல் முறையாக இடைதரர்கள் இன்றி விவசாயிகளிடம் நேரடியாக சென்று நெல் கொள்முதல் செய்யப்பட்டு ஆன்லைன் மூலமாக பதிவு செய்து உடனுக்குடன் பணம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் இன்று மதியம் 3 மணியளவில் வரவு வைக்கப்பட்டது. இடைத்தரகர்கள் இன்றி முழுத் தொகையும், உடனே கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தொடர்புடைய செய்தி