சிவகங்கை அருகேயுள்ள சித்தலூரைச் சேர்ந்தவர் முருகன். திமுக ஓன்றிய துணைச் செயலாளரான இவர், ஒப்பந்ததாரராகவும் உள்ளார். கடந்த 26-ம் தேதி சிவகங்கை ஒன்றிய அலுவலகத்தில் இருந்த உதவிப் பொறியாளர் கிருஷ்ணகுமாரியை இவர் இருக்கையைத் தூக்கி தாக்க முயன்றுள்ளார். கிருஷ்ணகுமாரி அளித்த புகாரின்பேரில், சிவ கங்கை நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, முருகனைத் தேடி வந்தனர். தலைமறைவாக இருந்த முருகனை காவல்துறையினர் நேற்று கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.