விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம்

79பார்த்தது
சிவகங்கை மாவட்டம்திருப்புவனம் அருகே உள்ள பூவந்தியில் விநாயகர் சதுர்த்தி மற்றும்முனீஸ்வரர் கோவில் திருவிழாவை முன்னிட்டு இரு பிரிவுகளாக மாட்டுவண்டி எல்கை பந்தயம் இன்று(செப்.7) நடைபெற்றது. பெரிய மாட்டுப் பிரிவு மாட்டுவண்டி பந்தயத்தை ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகர் துவக்கி வைத்தார்.

சிறிய மாட்டு பிரிவு மாட்டு வண்டி பந்தயத்தை கே பி எஸ் கண்ணன் துவக்கி வைத்தார். இரு பிரிவுகளாக நடைபெற்ற மாட்டுவண்டி பந்தயத்தில் பெரியமாடு பிரிவில் 6 ஜோடி மாட்டு வண்டிகளும் சிறிய மாட்டு பிரிவில் 17 ஜோடி மாட்டு வண்டிகளும் கலந்து கொண்டன சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மொத்தம் 23 ஜோடி மாட்டுவண்டிகள் பங்கேற்றன.

பெரிய மாட்டுக்கு 8 மைல் தொலைவும்சிறிய மாற்று பிரிவிற்கு 6 மைல் தொலைவும் பந்தைய எல்லைகளாக நிர்ணயம் செய்யப்பட்டது. பூவந்தி யிலிருந்து செம்பூர் செல்லும் சாலையில் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் எல்லையில் கொடியை வாங்கி வெற்றி பெற்ற முதல் 4 மாடுகளின் உரிமையாளர்களுக்கும் அதை ஓட்டி வந்த சாரதிகளுக்கும் ரொக்கப் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இப்போட்டியினை திருப்புவனம் பூவந்தி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பந்தய ரசிகர்கள் சாலையின் இரு புறங்களிலும் நின்று உற்சாகமாக போட்டியினை இன்று காலை சுமார் பத்து மணி வரை கண்டுகளித்தனர்.

தொடர்புடைய செய்தி