மதுரையிலிருந்து ராமேசுவரத்துக்கு அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே பாப்பாங்குளம் விலக்கு என்ற இடத்தில் வந்தபோது, முன்னால் சென்ற கார் திடீரென நின்றது. இதையடுத்து அரசு பேருந்தைஓட்டுநர் நிறுத்தினார். அப்போது, அரசு பேருந்தின் பின்புறத்தில் தனியார் பேருந்து மோதியது. 2 பேருந்துகளிலும் இருந்த 10-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.
அவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்புவனம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். படுகாய மடைந்த 3 பேரை சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து திருப்புவனம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.