காரைக்குடியில் முப்பெரும் விழா அமைச்சர் பங்கேற்பு

62பார்த்தது
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கலைஞர் தமிழ்ச் சங்கம் சார்பில் பெரியார் பிறந்ததினம், அண்ணா பிறந்ததினம், திமுக தொடங்கிய தினம் என முப்பெரும் விழா
நடைபெற்றது. கூட்டுறவுத்துறை அமைச்சரும், திமுக மாவட்டச் செயலாளருமான கே. ஆர். பெரியகருப்பன் தலைமை வகித்தார். கலைஞர் தமிழ்ச்சங்க செயலாளர் செந்தில்குமார் வரவேற்றார். முன்னாள் அமைச்சர் தென்னவன், புரவலர் படிக்காசு, முன்னாள்எம்எல்ஏ துரைராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். திராவிடர் கழக துணை பொதுச்செயலாளர் மதிவதனி பேசினார். முன்னாள் எம்எல்ஏ சுப. மதியரசன், திமுக மாவட்டத் துணைச் செயலாளர் சேங்கைமாறன், மாநகராட்சி மேயர் முத்துத்துரை, துணை மேயர் குணசேகரன், திக மாவட்ட காப்பாளர் சாமிதிராவிடமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி