மாநகராட்சி கூட்டத்தில் ஒருமையில் பேசிய காரைக்குடி மேயர்

52பார்த்தது
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாநகராட்சியில் முதல் மாமன்ற கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 27 வது வார்டு அதிமுக மாமன்ற உறுப்பினர் பேசும்போது கொசு உற்பத்தியை தடுப்பதற்காக மாநகராட்சி சார்பில் 80 ஊழியர்கள் பணியில் உள்ளதாகவும் அவர்களுக்கு 350 ரூபாய் சம்பளம் வழங்கிவிட்டு கணக்கில் 702 ரூபாய் என கணக்கு காண்பிப்பதாக கூறி அதற்கான வெள்ளை அறிக்கை கேட்டுள்ளார். இதனால் அங்கிருந்த திமுக கவுன்சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவருக்கொருவர் போடா வாடா என ஒருமையில் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் மேயர் முத்துதுரை அதிமுக கவுன்சிலர் பிரகாஷை வெளியே போயா என ஒருமையில் பேசியும் உன்னை சஸ்பெண்ட் செய்து விடுவேன் எனக் கூறியது அங்கிருந்து அனைவரையும் முகம்சுளிக்க வைத்தது. மேலும் இனிமேல் சாதகமாக செய்தி வெளியிடும் ஐந்து பத்திரிக்கையாளர்கள் மட்டுமே வர அழைப்பு கொடுப்பதாகவும் குற்றங்களை சுற்றி காட்டும் பத்திரிகையாளர்கள் இனிமேல் வர வேண்டாம் எனவும் மேயர் முத்துதுறை பத்திரிகையாளர்களைதாக்கி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கு பத்திரிகையாளர்களை பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை. நாங்கள் யாரும் உங்களிடம் வந்து எதற்காகவும் நிற்கவில்லை என பத்திரிக்கையாளர்கள் மேருடன் வாக்குவாதம் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி