சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தபோது இவ்வாறு தெரிவித்தார். மேலும் மது ஒழிப்பு மாநாடு என்பது முடிந்துபோன விஷயம் என்றார். மது ஒழிப்பு மாநாடு மக்கள் நம்பக்கூடிய நாடகமாகவும் இல்லை.
தமிழகத்தில் பிறந்த அனைத்து தமிழர்களும், பெரியாரின் கொள்கைகளை ஏற்றே ஆகவேண்டும் என்ற சூழ்நிலை உள்ளது. சாதாரண மக்களும் உச்ச நிலையை அடைய பெரியார் தான் மூல காரணமாக அமைந்திருக்கிறார். எடப்பாடி தலைமையிலான அதிமுகவை திமுகவின் பி டீமாக தமிழக மக்களே பேசி வருகின்றனர்.
அதிமுக தலைவர்களை ஒன்றிணைக்கும் புதிய சகாப்தத்தை தொண்டர்கள் விரைவில் ஏற்படுத்த உள்ளனர். அதிமுக தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பு இறுதியானவை அல்ல. சென்னை உயர் நீதிமன்றத்தில் 6 வழக்குகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் தொண்டர்களின் அதிமுக வெற்றி பெறும் என OPS தெரிவித்தார்.