நாடகங்களில் நடித்து வந்த மனோரமாவை கண்ணதாசன் திரையுலகிற்கு அழைத்து வந்தார். கண்ணதாசன் இயக்கிய ‘மாலையிட்ட மங்கை’ திரைப்படம் மனோரமாவில் முதல் திரைப்படமாக அமைந்தது. இந்த படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்க மனோரமா மறுத்துள்ளார். கதாநாயகியாக நடித்தால் சில வருடங்களில் வெளியேற்றி விடுவார்கள். ஆனால் நகைச்சுவை நடிகையாக நடித்தால் பல ஆண்டுகள் நீங்கள் இந்த துறையில் நிலைக்கலாம் என கண்ணதாசன் சமாதானப்படுத்தி இந்த வேடத்தில் நடிக்க வைத்துள்ளார்.