சாலை விபத்தில் புதுமணப்பெண் சாவு

64பார்த்தது
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே பரியன்வயல் கிராமத்தில் வசிக்கும் செல்வராஜ் -மாலதி தம்பதியரின் மகள் முத்துமணி(27). கோவையில் IT நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். தேவகோட்டை அருகே வளங்காவயல் கிராமத்தைச் சேர்ந்த ராமையா(30). வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். ராமையாவிற்கும் முத்துமணிக்கும் இந்த மாதம் 8ம்தேதி ஞாயிறு அன்று தேவகோட்டையில் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் புது மணதம்பதியார் வளங்காவயலில் இருந்து பரியன்வயலுக்கு பைக்கில் வந்து கொண்டிருந்தனர். ஆறாவயல் பஞ்சுமில் அருகே திருப்பத்தில் பைக் கட்டுப்பாட்டை இழந்து இருவரும் கீழே விழுந்தனர். இதில் முத்துமணி படுகாயம் அடைந்தார். ராமையாவிற்கு சிறுசிறு காயங்கள் ஏற்பட்டது. இருவரையும் தேவகோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். முத்துமணி முதலுதவி சிகிச்சைக்குப்பின் ஆபத்தான நிலையில் காரைக்குடி மானகிரி தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்த முத்துமணியின் உடல் பிரேதபரிசோதனைக்காக தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் மனைவி இறந்த தகவல் அறிந்த ராமையா விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார். விபத்து குறித்து ஆறாவயல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி