வெளிநாட்டிற்கு ஆட்கள் அனுப்புவதாக கூறி பல லட்ச ரூபாய் மோசடி

60பார்த்தது
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை சேர்ந்தவர் கார்த்திக்.
இவர் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு காரைக்குடி கழனி வாசல் பகுதியில் சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்புவதாகவும்,
அதற்கான பயிற்சி அளிப்பதாகவும் கூறி விளம்பரம் செய்தார்.
இந்த விளம்பரத்தை நம்பி சிவகங்கை,
புதுக்கோட்டை,
ராமநாதபுரம் உட்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் கார்த்தி கிடம் பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது,
ஆனால் வெளிநாட்டிற்கு அனுப்பாமல் காலதாமதம் செய்து வந்ததால், சந்தேகம் அடைந்த சிலர் கார்த்திக்கை நெருக்க ஆரம்பித்துள்ளனர்.
இதனால் நிறுவனத்தை மூடிவிட்டு கார்த்திக் தலைமறைவாகி விட்டார். இது குறித்து லட்சுமணன் என்பவர் காரைக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனை அடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
டோங்கரே பிரவீன் உமேஷ் உத்தரவின் பேரில், காரைக்குடி டிஎஸ்பி பிரகாஷ் தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டு மேற்கொண்ட விசாரணையில் ,
நிறுவனத்தின் உரிமையாளர்
கார்த்திக் மற்றும் உடந்தையாக இருந்த அடைக்கப்பன் ஆகியோரை கைது செய்து, அவர்களிடம் இருந்து இரண்டரை லட்ச ரூபாய் பணம், பத்திரங்கள்,
மற்றும் 25க்கும் மேற்பட்ட பாஸ்போர்ட்டுகளை பறிமுதல் செய்தனர்.
இந்த புகாரில் மேலும் இருவரை போலீசார் தேடி வரும் நிலையில், 50 லட்சத்திற்கு மேல் மோசடி செய்திருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி