சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே முத்துபட்டணத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் 30 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வந்தது இந்த ஆரம்ப சூழ்நிலையத்தில் அப்பகுதி சுற்றியுள்ள மீனாட்சிபுரம் ஜீவா நகர் அண்ணாநகர் சேர்வார்ஊரணி காட்டுதலைவாசல் என பல்வேறு பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் தினமும் சிகிச்சைக்கு வந்து சென்றனர். அது போல் அப்பகுதி மக்களுக்கு பொது சிகிச்சையும் அளிக்கப்பட்டு வந்தது. தற்போது இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை நீண்ட தூரம் உள்ள பெரியார் சிலை பகுதிக்கு மாற்றியதால் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களுக்கு மிகவும் சிரமமாக உள்ளதாக கூறி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பெண் ஒருவர் கர்ப்பிணிப் பெண் போல் வேடம் அணிந்தும் முதியவர்கள் தலையிலும், கைகளில் கட்டு போட்டுக் கொண்டும் நூதன முதலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.