சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பெரியார் சிலை பகுதி போக்குவரத்து மிகுந்த பகுதியாகும். நான்கு சாலைகள் சந்திக்கும் இப்பகுதியில் சிக்னல் அருகே இரண்டு காளை மாடுகள் ஒன்றோடு ஒன்று ஆக்ரோஷமாக மோதிக்கொண்டது. சண்டையை விலக்கி விட ஒருவர் தீவிரமாக முயன்றும் காளைகள் இரண்டும் சண்டையை நிறுத்தவில்லை.
வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் விதமாக காளைகளின் மோதல் இருந்தது. பொதுமக்கள் நடமாட்டம், வாகன போக்குவரத்து அதிகம் உள்ள பகுதியில் காளைகள் சண்டையிட்டுக் கொள்ளும் காட்சியை சிலர் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதை அடுத்து, காட்சி தற்போது வைரலாகியுள்ளது.