சிங்கங்களுக்கு சீதா, அக்பர் பெயர்.. நீதிமன்றம் அதிரடி

55பார்த்தது
சிங்கங்களுக்கு சீதா, அக்பர் பெயர்.. நீதிமன்றம் அதிரடி
உயிரியல் பூங்காவில் சிங்கத்திற்கு சீதா என பெயரிடப்பட்டதற்கு எதிரான வழக்கில், சீதாவை கடவுளாக வணங்குகிறோம். அவர் கோயிலில் இருக்க வேண்டும். காட்டுக்குள் அல்ல என விஷ்வ ஹிந்து பரிஷித் தரப்பில் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது. அன்பினால் பெயரிட்டிருப்பார்கள் என நீதிபதி கூற, நாளை ஒரு கழுதைக்கு தெய்வத்தின் பெயர் வைப்பார்கள். எங்களின் மனதை இது புண்படுத்துகிறது என வி.எச்.பி. தரப்பு வாதிட்டுள்ளது. “துர்கை பூஜையின் போது நாங்கள் சிங்கத்தை வழிபடுகிறோம். ஒவ்வொருவரின் மனநிலையப் பொறுத்தது” என நீதிபதி பதில் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி