காலையில் வடித்த சாதம் நாள் முழுவதும் கெட்டுப் போகாமல் இருப்பதற்கு எளிய வழிமுறை ஒன்று உள்ளது. கோயில் திருவிழா, திருமண வீடுகளில் இந்த நடைமுறையை தான் பின்பற்றுகின்றனர். சாதம் வெந்துவரும் நேரத்தில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெயை ஊற்றுவதால் சாதம் உதிரியாக வரும். வடித்த சாதத்தை அதே பாத்திரத்தில் வைக்காமல் அகலமான பாத்திரம், ஹாட் பாக்ஸில் கீழே ஒரு சுத்தமான வெள்ளை துணியை விரித்து அதில் மாற்ற வேண்டும். இப்படி செய்தால் சாதம் நாள் முழுவதும் கெடாமல் அப்படியே இருக்கும்.