பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளில் பயிலும் மாணவர்களுக்கு திறன்வளர் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. கலை, அறிவியர், விளையாட்டு, மென்பொருள் முதலான பணித்திறன்களை வளர்த்துக் கொள்ள ஏதுவாக ரூ.10 கோடி மதிப்பீட்டில் கல்லூரிகளில் 'நல்லோசை' சமூக ஆய்வகங்களும், பள்ளி விடுதிகளில் 'கற்றல் இனிதே' என்ற திட்டங்கள் மூலம் திறன் சார்ந்த பட்டறைகள், போட்டிகள் நடத்தப்படும். சமூக ஆய்வகம் மூலம் 6,573 கல்லூரி மாணவர்களும், கற்றல் இனிதே மூலம் 14,916 பள்ளி மாணவர்களும் பயனடைவார்கள்.