கர்நாடகா: குந்தப்பனஹள்ளி கிராமத்தை சேர்ந்த அனுஷா (28) என்ற பெண் திருமணமாகி பின்னர் கணவரை பிரிந்தார். இதை தொடர்ந்து பவன் என்ற இளைஞருடன் காதல் வயப்பட்டதில் கர்ப்பமானார். தன்னை மணந்து கொள்ள பவனிடம் அனுஷா கூறியும் அவர் மறுத்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் 8 மாத கர்ப்பிணியான அனுஷா நேற்று முன்தினம் (ஜன. 05) பவன் வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இது தொடர்பாக பவனை போலீஸ் கைது செய்து விசாரிக்கிறது.