ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ், மத்திய அரசு ரூ. 2,152 கோடியை வழங்காததால், மாநில அரசின் நிதி நிலைமை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட கவர்னர் உரையில் விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 44 லட்சம் மாணவர்கள், 2.20 லட்சம் ஆசிரியர்கள், 21,276 பணியாளர்களின் எதிர்காலமும் இதை சார்ந்திருப்பதால் மத்திய அரசு நிதியை விரைவில் விடுவிக்கும் என மாநில அரசு நம்புகிறது.