அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். நேற்று (ஜன. 06) சட்டப்பேரவை நிகழ்வில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பிய அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக இன்றைய தினம் (ஜன. 07) நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அவர் பங்கேற்கவில்லை. இபிஎஸ்-ஐ கட்சியின் மூத்த தலைவர்கள் சந்தித்து நலம் விசாரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.