தமிழகத்தில் உள்ள பேருந்து நிலையங்களை சுற்றியுள்ள சுவர்கள் மற்றும் தடுப்புகளில் சிறுநீர் கழிக்கப்படும் அவலம் தொடர் கதையாகி வருகிறது. இதை தடுக்கும் நோக்கில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையத்தை சுற்றி உள்ள தடுப்புகளில் சிறுநீர் கழித்தால் பலத்த சத்தத்துடன் அலாரம் கேட்கும் வகையில் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. சிறுநீர் கழிப்பதை தடுக்கும் புதிய முயற்சியாக இது மேற்கொள்ளப்பட்டுள்ளது.