சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை காண வரும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சென்னை பெருநகர காவல் துறை, 'சென்னை சிங்கம் IPL QR குறியீடு என்ற நவீன வசதியை அறிமுகம் செய்துள்ளது. இந்த வசதி மூலம் "பொதுமக்கள் கிரிக்கெட் போட்டியை காணவரும்போது, தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை இந்த QR குறியீடு மூலம் காவல்துறைக்கு தெரிவிக்கலாம். காவல்துறை உடனடியாக பிரச்சனைகளுக்கு நடவடிக்கை எடுப்பார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.