மின்சார கட்டணம் குறையணுமா? ஏசியை இப்படி பயன்படுத்துங்கள்

73பார்த்தது
மின்சார கட்டணம் குறையணுமா? ஏசியை இப்படி பயன்படுத்துங்கள்
ஏசியை 24 - 26 டெம்பரேச்சரில் பயன்படுத்தி வந்தால் மின் கட்டணத்தை சற்று குறைக்கலாம். இதுதான் சரியான அளவு என்றும், இதில் நல்ல காற்றோட்டம் கிடைக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஏசி பில்டரில் ஒவ்வொரு முறை தூசி சேரும்போதும் அதன் கூலிங் திறன் குறையத் தொடங்கும். இதனால், கூலிங் வழங்க மோட்டார் கூடுதல் சக்தியுடன் செயல்படத் தொடங்கும். இதனால், மின் கட்டணம் அதிகரிக்கக் கூடும்.

ஆகவே, ஏசியில் உள்ள தூசியை அவ்வபோது சுத்தம் செய்ய வேண்டும். அறையில் உங்களுக்கு தேவையான அளவு குளிர்ச்சி கிடைத்த பிறகு உடனடியாக ஏசியை அணைக்கலாம். சுமார் 1 மணி நேரத்திற்கு அந்த குளிர்ச்சி நீடிக்கும். இதனால், மின் கட்டணமும் குறையும்.

தொடர்புடைய செய்தி