துப்பாக்கி சுடும் பயிற்சி.. சிறுவனின் தலையில் பாய்ந்த குண்டு

586பார்த்தது
துப்பாக்கி சுடும் பயிற்சி.. சிறுவனின் தலையில் பாய்ந்த குண்டு
துப்பாக்கி சுடும் பயிற்சியின்போது சிறுவன் தலையில் குண்டு பாய்ந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாம்பரம் அடுத்த முடிச்சூர் லட்சுமி நகரில் இயங்கி வரும் செங்கல்பட்டு ரைபிள் கிளப்பில் ஏர்கன் துப்பாக்கி சுடும் பயிற்சியின்போது 13 வயது சிறுவனின் தலையில் அலுமினியம் குண்டு பாய்ந்தது. இதில் சிறுவன் படுகாயம் அடைந்தான். படுகாயமடைந்த சிறுவன், பெருங்களத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளான். சம்பவம் குறித்து பீர்க்கன்காரணை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி